மொத்தமாக '10 ஆயிரம்' பேரை.. வீட்டுக்கு அனுப்பும் 'இன்போசிஸ்'.. இப்படியொரு காரணமா?

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Manjula | Nov 05, 2019 01:01 PM

இந்தியாவின் மிகப்பெரிய 2-வது அவுட்சோர்ஸிங் நிறுவனமான இன்போசிஸ் மொத்தமாக 10 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

Infosys lays off up to 10,000 employees in mid, senior level

செலவினங்களை குறைக்கவும், நிறுவனத்தின் கட்டமைப்பினை முறைப்படுத்துவதற்கும் நடுத்தர மற்றும் மூத்த மட்டத்தில் உள்ள பணியாளர்களை இன்போசிஸ் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் புதிதாக பணிக்கு சேர்ந்த ஊழியர்களை வைத்துக்கொண்டு, அதிக சம்பளம் வாங்கும் நடுத்தர மற்றும் சீனியர் லெவல் அதிகாரிகளை நீக்க இன்போசிஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறதாம்.

முன்னதாக காக்னிசென்ட் நிறுவனம் இதேபோல 13 ஆயிரம் ஊழியர்களை வெளியில் அனுப்ப முடிவு செய்துள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #JOBS #INFOSYS