தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்!... பேட்ரோல் வண்டியில் உணவு விநியோகம்... இதயங்களை கொள்ளை கொண்ட காவலர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Mar 25, 2020 03:31 PM

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளா நிலையில், ஏழைகளுக்கு உணவு வழங்கி உதவிய காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

bangalore police provide food to the homeless and poor

197 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,23,413 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக இருந்தது. இதற்கிடையே, நேற்று நள்ளிரவு தமிழகத்தில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார்.

நேற்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டார். நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை உருவானது.

ஊரடங்கு அமலுக்கு வந்ததையொட்டி, நாடு முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு பேரிடர் காலங்களில் போலீஸார் இறங்கி வந்து மக்களுக்கு உதவுவதை நாம் நேரடியாக பார்த்திருக்கிறோம். அந்த வகையில் தற்போது பெங்களூருவில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு அப்பகுதி போலீஸார் உணவு வழங்கி உதவி செய்துள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

அன்றாடங் காட்சியாக, வீடின்றி சாலையோர நடைமேடைகளில் வசிக்கும் ஏராளமானோரின் வயிற்றுப் பசியைப் போக்கிவரும் காவல்துறையினருக்கு ஒரு ராயல் சல்யூட்.

 

Tags : #POLICE #BENGALURU #CORONAVIRUSINDIA