‘21 நாட்கள்’ ஊரடங்கால்... பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் ‘சேவை’ நிறுத்தமா?... ‘விவரங்கள்’ உள்ளே...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா அச்சுறுத்தலால் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் ஆகியவற்றின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் பெரும்பாலான உலக நாடுகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் ஆகியவை அவற்றின் சேவையில் மாற்றம் செய்துள்ளன. அமேசான் நிறுவனம் தங்களுடைய பணியாளர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியமான பொருட்கள் மட்டும் டெலிவரி செய்யப்படும் என அறிவித்துள்ளது.
அத்துடன் வாடிக்கையாளர்கள் முன்னர் செய்த ஆர்டர்களை ரத்து செய்துகொள்ளலாம் எனவும் அதற்கான பணம் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி அளிக்கப்படும் எனவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் பிளிப்கார்ட் நிறுவனம் தற்காலிகமாக அதன் சேவையை நிறுத்தியுள்ளது.
