"பஸ்ஸில் கேட்பாரற்றுக் கிடந்த 5 சவரன் தாலிச்சங்கிலி!"... "உரியவரிடம் ஒப்படைத்த அரசுப் பேருந்து ஊழியர்கள்!!"... "பொதுமக்கள் நெகிழ்ச்சி"
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசுப் பேருந்தில் பயணித்த ஒரு பெண் தவறவிட்ட ஐந்து சவரன் தங்கச் சங்கிலியை பத்திரமாக ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கெட்டவாடி என்ற ஊர் உள்ளது. கெட்டவாடியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பேருந்தில், சில பயணிகள் மட்டும் இருந்துள்ளனர். அப்போது, ஒரு இருக்கையின் அடியில், தங்கச் சங்கிலி இருப்பதை நடத்துநர் மகேஷ் பார்த்துள்ளார். இது குறித்து, நடத்துநர் மகேஷ் மற்றும் ஓட்டுநர் ரமேஷ் பயணிகளிடம் கூறி, தாலிக்கொடியை தவறவிட்ட பயணியைத் தங்களிடம் வந்து தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக, பேருந்து கெட்டவாடிக்குச் சென்றபோது அதில் பயணித்த துண்டம்மா என்ற பெண், தன்னுடைய தாலிச் சங்கிலியை தவறவிட்டது தெரியவந்தது. பின்னர், அந்த பெண்ணை வரவழைத்து அவரது தங்கச்சங்கிலியை நடத்துநரும், ஓட்டுநரும் ஒப்படைத்தனர்.
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் இந்த நேர்மை, அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
