‘உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டி’!.. '21 வயதில் பஞ்சாயத்து தலைவர்'.. திரும்பி பார்க்க வைத்த கல்லூரி மாணவி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 02, 2020 05:48 PM

உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கல்லூரி மாணவி 210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

Local body Election results college student wins Panchayat President

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம்  கே.என். தொட்டி பஞ்சாயத்து தலைவர் போட்டிக்கு 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா போட்டியிட்டார். இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட 210 வாக்குகள் அதிகம் பெற்று ஜெய்சந்தியா வெற்றி பெற்றுள்ளார். இவர் கல்லூரியில் பிபிஏ இறுதி ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரிட்டாப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவராக 79 வயது பாட்டி வீரம்மாள் வெற்றி பெற்றுள்ளார். மேலும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2-வது வார்டு ஒன்றியக் குழுவில் திமுக சார்பில் போட்டியிட்ட முதல் திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

Tags : #LOCALBODYELECTIONS #LOCALBODYELECTIONRESULTS