‘டோல்கேட்’ அருகே சிறுநீர் கழிக்க சென்ற மனைவி.. ‘டீக்கடையில் நின்ற கணவன்’.. கத்தி முனையில் நடந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 20, 2020 08:37 AM

சுங்கச்சாவடியில் சிறுநீர் கழிக்க சென்ற பெண்ணை கடத்தி கத்தி முனையில் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 year old woman raped at knifepoint near toll plaza in Karnal

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த 19 வயது பெண் ஒரு தனது கணவருடன் ஹரியானவில் உள்ள உறவினர் வீட்டுக்கு பேருந்தில் சென்றுள்ளார். இருவரும் கர்னல் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடியில் இறங்கியுள்ளனர். அப்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என கணவரிடம் கூறிவிட்டு சுங்கச்சாவடியில் உள்ள கழிவறைக்கு அப்பெண் சென்றுள்ளார். அவரது கணவர் அருகில் உள்ள் டீக்கடையில் தேநீர் அருந்திக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது கழிவறைக்கு அருகே வந்த இருவர், கத்தியைக் காட்டி மிரட்டி அருகில் உள்ள புதருக்குள் அப்பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர் கத்தி முனையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இருவரும் தப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவத்தை கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் இரண்டு நபர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #SEXUALABUSE #TOLLPLAZA #KARNAL #HARYANA #WOMAN