'2000 ரூபாய் நோட்டுகளை ATM'ல போடாதீங்க'... 'பரிவர்த்தனையும் கிடையாது'... வங்கியின் அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Feb 21, 2020 12:14 PM

மார்ச் மாதம் முதல் ₹ 2000 நோட்டு பரிவர்த்தனை ATM-களில் இருக்காது என்று இந்தியன் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.

Indian Bank is going to stop circulation of 2000 rs currency note

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன. ஆனால் ரூ.2000 நோட்டுகள் கள்ளத்தனமாக அடிக்கப்பட்டு அதிக அளவில்  புழக்கத்தில் விடப்பட்டது. இது ரிசர்வ் வங்கிக்கு பெரும் தலைவலியாக மாறியது. இதனை முடிவுக்குக் கொண்டு வர 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இதனால் ரூ.2000 நோட்டு அச்சடிப்பது குறைக்கப்பட்டு பின்னர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து மக்களிடையே ₹ 2000 நோட்டு புழக்கம் அதிக அளவில் குறைந்தது. அதற்குப் பதிலாகக் கூடுதலாக ரூ.500, ரூ.200, ரூ.100 ஆகிய ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டது. இதில், ரூ.200 நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. வங்கிகளும் ஏ.டி.எம்'களில் 2000 ரூபாய் நோட்டுகளை வைப்பதைப் பெருமளவில் குறைத்தது.

இந்நிலையில் வரும் மார்ச் மாதம் முதல் 2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் பணப்பரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில், 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்.களில் செலுத்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் போது, 2000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் இந்தியன் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதுதவிர ஏ.டி.எம் பண பரிவர்த்தனைகளிலும் இனிமேல் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : #RBI #CIRCULATION #INDIAN BANK #₹2000 CURRENCY NOTES