‘வெடித்து சிதறிய போன்’.. சார்ஜ் போட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 11, 2019 12:08 PM

சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த செல்போன் வெடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youth dies in mobile phone blast incident in Uttar Pradesh

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் அருகே கோபால்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜ் செய்துள்ளார். சிறிது நேரத்தில் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த செல்போன் வெடித்து சிதறியுள்ளது. இதனால் போன் அருகே இருந்த இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலிவு விலையில் கிடைக்கும் சார்ஜர்கள் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாக இருக்கலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். செல்போனுக்கு மின்சாரத்தை எடுத்து செல்லும்போது மலிவு விலை சார்ஜர்கள் சரியாக இயங்காது எனவும், அதனால் அதிக அளவிலான மின்சாரம் பேட்டரிக்கு சென்று வெடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Tags : #SMARTPHONE #UTTARPRADESH #YOUTH #DIES