சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்..! படுகாயம் அடைந்த பாஜக எம்.பி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 10, 2019 09:27 PM

பாஜக எம்.பி சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BJP MP Tirath Singh Rawat car accident in Uttarakhand

உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் தொகுதி எம்.பி திரத் சிங் ராவத், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று தனது காரில் சென்றுள்ளார். பிம்கோடா பன்ட் டீப் சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் நிலைதடுமாறி கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காரில் இருந்த பாஜக எம்.பி திரத் சிங் ராவத் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #ACCIDENT #BJP #CAR #UTTARAKHAND