'மாமியார் சொன்னாங்க, அதுனால தான் இந்த முடிவெடுத்தேன் ... மூன்றாவதாக பிறந்த 'பெண் குழந்தை' ... தாயார் செய்த 'கொடூர' செயல்
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆண்டிப்பட்டி அருகே மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அக்குழந்தையை எருக்கம்பால் கொடுத்து தாய் மற்றும் பாட்டியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் சுரேஷ். கட்டிட தொழிலாளியான சுரேஷிற்கு கவிதா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் மூன்றாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை வயிற்று வலியில் திடீரென இறந்துவிட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறிவிட்டு வீட்டின் அருகே குழந்தையை புதைத்துள்ளனர். சந்தகத்தின் பேரில் அக்கம் பக்கத்தினர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.
கவிதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மாமியாரின் வற்புறுத்தலின் பெயரில் குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்தார். இத்தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் குழந்தையின் தாய் மற்றும் பாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன் ஆண்டிபட்டி அருகே சிசுக் கொலை நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
