‘சரி வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்!’.. ‘தகாத உறவை அடுத்து’.. ‘பெண் செய்த காரியம்’.. ‘கார் டிரைவருக்கு நேர்ந்த கதி!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி மாவட்டம் போடி, நந்தவன தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி வளர்மதி.

3 வருடங்களாக கணவரைப் பிரிந்து வாழும் வளர்மதிக்கு கேரளாவில் 15 ஏக்கர் ஏலத்தோட்டம் உள்ள நிலையில் இவரிடம் கேரளாவைச் சேர்ந்த பியல்ராஜா (31) என்பவர் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் இருவருக்கும் இடையே தகாத உறவு உண்டானது. பின்னர் வளர்மதியிடம் கருத்து வேறுபாடு காரணமாக ராஜா கத்தியை காட்டி மிரட்டி கொல்ல முயன்றதாக தெரிகிறது.
இந்நிலையில் சாமாதானமாகிவிடலாம் என்று கூறி ராஜாவை வளர்மதி போடிக்கு வரச் சொல்லி அழைத்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த ராஜாவின் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவியதோடு, தான் ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்திக்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சென்ற போலீஸார் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வளர்மதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
