‘செல்ஃபோனில் தந்த தொல்லை’... ‘கணவருடன் சேர்ந்து இளம் பெண்’... 'செய்த அதிர்ச்சி காரியம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 09, 2019 12:51 PM

அவதூறு பரப்பிய நாத்தனாரின் கணவரை, இளம் பெண் கணவருடன் சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

husband and wife killed their relative due to family issue

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே, ஒத்தப்பட்டியில் வசித்து வந்தவர் ராஜேஸ்வரி (30). இவர் தன் கணவர் மணிகண்டன் (35) என்பவருடன், வாழை அறுக்கும் பணிக்கு கடந்த சனிக்கிழமை சென்று கொண்ருந்தார். அப்போது பெருமாள்பட்டியில் வசித்து வரும் ராஜேஸ்வரியின் தம்பி பாண்டீஸ்வரனும் (30), அவரது மனைவி நிரஞ்சனாவும் (25) பைக்கில் வந்து வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தகராறு முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நிரஞ்சனா, அரவது கணவர் பாண்டீஸ்வரன் இருவரும் சேர்ந்து,  அக்கா கணவரான மணிகண்டனை சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க வந்த  மணிகண்டனின் மனைவி ராஜேஸ்வரிக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேஸ்வரி காயத்திற்கு சிகிச்சை பெற்றார். அதன்பின்னர், நிரஞ்சனா மற்றும் பாண்டீஸ்வரன் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மச்சினன் மனைவியான நிரஞ்சனாவிடம், மணிகண்டன் செல்ஃபோனில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் நிரஞ்சனா தன்னுடன் தனிமையில் பேசி வருவதாக, மணிகண்டன் அவதூறு பரப்பி வந்துள்ளார். பலமுறை கண்டித்தும் கேட்காததால், ஆத்திரமடைந்த நிலையில், அக்கா மற்றும் அவரது கணவரை, பாண்டீஸ்வரன் மற்றும் அவரது மனைவி நிரஞ்சனா வெட்டி கொலை செய்துள்ளார்.

Tags : #MURDERED #THENI #KILLED #HUSBAND #WIFE