“நாயைக் குறிவெச்சுதான் கத்தியை வீசினேன்”.. கோபக்கார கணவரால் மனைவிக்கு நேர்ந்த பரிதாப கதி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டு சாவி கொடுக்காத கோபத்தில் மனைவியை நோக்கி வெட்டுக்கத்தியை தூக்கி வீசி தாக்கியதால், கத்தி தலையில் சொருகியதை அடுத்து மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லூர் மாவட்டம் தோட்டப்பள்ளியில் வசித்துவந்தவர்கள் சேஷய்யா, ஜெயம்மாள் தம்பதியர். இதில் பக்கத்து வீட்டினரிடம், சேஷய்யா சாவி கேட்டதாகவும் இதை கவனிக்காததால், ஜெயம்மாள் மீது சேஷய்யா கத்தியை எடுத்து வீசியதால், அவரது தலையில் கத்தி சொருகிக்கொண்ட சம்பவம் பதைபதைப்பை உண்டுபண்ணியது.
இதனை அடுத்து அந்த நபரை பிடித்து விசாரித்த போலீஸாரிடம், தன்னுடைய நாயை நோக்கித்தான் கத்தி வீசியதாகவும் ஆனால் குறுக்கே வந்த மனைவியின் தலை மீது கத்தி சொருகியதாகவும் சேஷய்யா கூறியுள்ளார்.
Tags : #HUSBANDANDWIFE
