“குடிச்சுட்டு வந்து மனைவியின் சகோதரரின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்”.. கள்ளக்காதலிக்காக கொலை செய்த நபர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டேங்க் ஆப்பரேட்டரான ரமேஷ்(43) ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன மூக்கனூரை சேர்ந்தவர். இவரது மனைவி நதியா(37), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி தாமலேரிமுத்தூர் பாட்டாளி நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரமேஷ் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், ரமேஷின் மனைவி நதியா மற்றும் அவரது தம்பி அரவிந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கணபதி என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை போலீஸார் தேடி வந்தனர். நேற்று ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸார், ஜோலார்பேட்டை பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கணபதியை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்தனர்.
“ரமேஷின் மனைவி நதியா, என்னிடம் சித்தாளாக வேலை செய்து வந்தார். நாங்கள் இருவரும் நெருங்கி பழகி, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ரமேஷ் குடித்துவிட்டு ஊதாரித் தனமாக இருந்ததால், ரமேசுக்கும், நதியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் ரமேஷ், நதியாவின் சகோதரர் அரவிந்தனின் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதனால் ரமேசுக்கும், அரவிந்தனுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்திற்க்கு மேல் ரமேஷின் நடவடிக்கை மிக மோசமாக போனதால், அரவிந்தனும் நதியாவும் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய திட்டம் தீட்டினர். மேலும் இந்த திட்டம் குறித்து இருவரும் என்னிடம் கூறினர். நதியா மீது ஆசைப்பட்டதால் ரமேஷை கொலைசெய்ய நான் சம்மதம் தெரிவித்தேன்.
இதனையடுத்து சம்பவத்தன்று, அரவிந்தன் தன் செல்போன் மூலம், வீட்டில் இருந்த ரமேஷை குடிக்க அழைத்தான். இதனை உண்மை என நம்பி வந்த ரமேஷை, பாட்டாளி நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அழைத்து சென்றோம். பின் ரமேஷை குடிக்க வைத்து கத்தியால் வெட்டி கொலை செய்தோம்” என கணபதி கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கணபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
