‘16 வருஷத்துல இது 4 -வது ஆப்ரேஷன்’.. பயிற்சி ஆட்டத்தில் காயம் அடைந்த சிஎஸ்கே ஸ்டார் ப்ளேயர்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 05, 2019 11:52 AM

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிரவோ தனது கையில் அறுவை சிகிச்சை செய்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Bravo injured his finger during a practice match of CPL 2019 match

கரிபியன் பிரிமியர் டி20 லீக் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் சார்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரவோ விளையாடுகிறார். இதற்கான பயிற்சி ஆட்டம் ஒன்றில் பிராவோ விளையாடினார். அப்போது அவரின் கை விரலில் காயம் ஏற்பட்டது.

இதனால் கரிபியன் பிரிமியர் லீக் தொடரில் இருந்து தற்போது பிராவோ வெளியேறியுள்ளார். மேலும் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பிரவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 4 -வது அறுவை சிகிச்சைக்கு செல்கிறேன். இந்த அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிய ஆண்டவனை நான் வேண்டிக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். மேலும் பிராவோ விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Tags : #CSK #IPL #BRAVO #INJURED #CPL2019 #CARIBBEAN #FINGER #PRACTICEMATCH #CHAMPION #LANDOF