'தேர்தல் நேரத்துல உதயநிதி இப்படி செஞ்சது நியாயமா'?... 'கொந்தளித்த அதிமுக'... தேர்தல் ஆணையத்திடம் முறையீடு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுகவின் பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், திமுக-வின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதோடு உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவர் தேர்தல் பரப்புரையின் போது எப்போதும் வெள்ளை சட்டை அணிந்திருந்தார். அதில் திமுக சின்னம் உதயசூரியன் பொறிக்கப்பட்டிருந்தது. தேர்தல் பரப்புரையில் அந்த சட்டையை அணிந்திருந்த அவர், இன்று வாக்குப்பதிவு நேரத்தில் அதே சின்னம் பொறித்த சட்டையோடு வந்து தனது வாக்கினைச் செலுத்தினார்.
இதற்கிடையே தேர்தல் விதிமுறைப்படி அவ்வாறு செய்யக்கூடாது. வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தொலைவில்தான் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும். எனவே இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள அதிமுக, உதயநிதி தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது. இதனால் அதிமுக-வின் பாபு முருகவேல் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்
