'வீதி வீதியா வந்து பிரச்சாரம் பண்ணாங்க... ஆனா இப்படி மோசம் போயிட்டோமே'!.. திடீரென ரோட்டில் இறங்கிய போராடிய மக்கள்!.. 'ஏங்க... இதெல்லாம் நியாயமா'?
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராசிபுரம் அருகே ஒரு கிராமத்தில் மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களின் இந்த எதிர்ப்புக்கான காரணம் அனைவரிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளதால் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பணப்பட்டுவாடாவில் யாராவது ஈடுபடுகின்றனரா என்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் கிராமத்தில் உள்ள அம்மன் நகர் பகுதியில் அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதற்காக வந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அங்கு வந்த அரசியல் கட்சியினர் பணம் கொடுக்காமல் அடுத்த பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து 20-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரை கண்டதும், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர்.
அதில் 5 பேரை கைது செய்த ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, பொதுமக்கள் வெளிப்படையாக ஓட்டுக்கு பணம் கேட்டு போராட்டம் நடத்தியது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
