"தமிழகத்தில் தொழில் வளம் பெருகி வருகிறது!".. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மத்தியிலும் மாநிலத்திலும் மக்களுக்கான அரசுகள் செயல்படுவதால் மக்கள் நலத் திட்டங்கள் கிடைக்கின்றன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மதுரை, பாண்டிக்கோவில் அருகே நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் இன்று (2.4.2021) உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலகமே வியக்கும் வகையில் ஒரே ஆண்டில் தடுப்பூசியை வழங்கிய பெருமை பிரதமர் மோடியையே சேரும் என்றார்.
மத்திய அரசு மக்களுக்கான அரசாக செயல்படுகிறது என்று குறிப்பிட்ட முதலமைச்சர், தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும், தேவையான நிதியையும் தருவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கி, மின்மிகை மாநிலமாகவும், அமைதி பூங்காவாகவும் திகழ்வதால் தொழில் வளம் பெருகுவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். திமுக ஒரு குடும்ப கட்சியாகவும், கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுவதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தவர் மோடி என குறிப்பிட்டார்.

மற்ற செய்திகள்
