VIDEO: ‘அண்ணா யாரு தளபதி’!.. யாருமே எதிர்பார்க்காத ‘மாஸ்’ என்ட்ரி.. கட்டுக்கடங்காமல் திரண்ட ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவை செலுத்த நடிகர் விஜய், சைக்கிளில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

திரையுலகப் பிரபலங்களில் ரஜினி, கமல், அஜித், சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் காலை 7 மணிக்கு தங்களுடைய வாக்கினை பதிவு செய்தனர். இதில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக காலை 6:30 மணிக்கு எல்லாம் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் நபராக வாக்கினைப் பதிவு செய்தார்.
Actor #Vijay comes to Neelangarai polling station riding a cycle. Probably taking a jibe at the #PetrolDieselPriceHike ?
Whatever be the reason, he sure has grabbed attention.
Read all updates on #TNAssemblyElection2021 here:
https://t.co/ad0qGmEJQ5#TNElection2021 pic.twitter.com/Od6uMz6uhO
— Smitha T K (@smitha_tk) April 6, 2021
இந்த நிலையில் காலை 9 மணியளவில் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களிப்பார் என்று தகவல் வெளியானது. இதனால் பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் பலரும் வாக்குச்சாவடியில் காத்திருந்தனர். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜய் தனது வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு வந்தார்.
இதைச் சற்று எதிர்பாராத ரசிகர்கள், அவருடைய சைக்கிள் பயணத்தை பைக்கில் பின் தொடர்ந்தார்கள். சில காவல்துறையினரும் விஜய்யின் பாதுகாப்புக்கு உடன் வந்தனர். ஒரு கட்டத்தில் விஜயின் சைக்கிள் பயணத்தை பின் தொடர்பவர்களின் கூட்டம் அதிகரிக்கவே, அவர் வேகமாக சைக்கிளை ஓட்ட ஆரம்பித்தார்.
😟😟😟 🔥🔥🔥#Master #Vijay #TNElection pic.twitter.com/WuWpRvtPGJ #Master paada paduthitangalada #Thalapathy65
— Vijay (@Vijay95452935) April 6, 2021
பின்பு நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அவர் சைக்கிளில் வந்ததால் அங்கு ரசிகர் கூட்டம் அதிகமாகக் கூடியது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை பத்திரமாக வழியனுப்பி வைத்தனர். வீட்டுக்கு திரும்பும் போது தனது கார் ஓட்டுநருடன் பைக்கில் சென்றார். அப்போதும் ரசிகர்களும் அவரை பின் தொடர்ந்து செல்ஃபி எடுக்க முயற்சித்தனர். இந்த நிலையில் இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
