VIDEO: முதல் ஆளாக ஜனநாயகக் கடமையை செலுத்திய ‘தல’.. சூழ்ந்த ரசிகர் கூட்டம்.. எந்த தொகுதி தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் முதல் ஆளாக வந்து வாக்கு செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 234 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமாரும் அவரது மனைவி ஷாலினியும் முதல் ஆளாக வந்து வாக்களித்தனர். வாக்கு அளிக்கும் நேரத்துக்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாகே இருவரும் வந்து வாக்குச்சாவடியில் காத்திருந்தனர். அஜித்குமார் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைக் காண ஏராளமானோர் குவிந்தனர். சிலர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர்.
பின்னர் போலீசார், அஜித்குமாரையும், ஷாலினியும் பாதுகாப்பாக வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால், அஜித்குமாரும் அவரது மனைவியும் வாக்குப்பதிவு தொடங்கும் காலை 7 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
#ThalaAjith Voteing Today at velacherry 🔥❤#Valimai pic.twitter.com/L0dV8YKHtz
— 🔥மிஸ்டர் வாலு 👑 ᵛᵃˡⁱᵐᵃⁱ 😎 (@thisisVaaluu) April 6, 2021
வாக்களித்துவிட்டு வெளியே வந்து நடிகர் அஜித்குமார், அடையாள மை பூசப்பட்ட தனது விரலை உயர்த்திக் காட்டினார். பின்னர் அவர்கள் இருவரும் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு நிலவியது.