VIDEO: பிரச்சாரத்திற்கு நடுவே... திடீரென ஒலித்த ‘விஜய்’ ரசிகர் குரல்.. சட்டென திரும்பிப் பார்த்து முதல்வர் கொடுத்த ‘செம’ ரியாக்ஷன்.. ‘ஆர்ப்பரித்த’ மக்கள் கூட்டம்..! - என்ன நடந்தது..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது நடிகர் விஜயின் ரசிகர் ஆதரவு தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று எடப்பாடி தொகுதிக்குட்பட்ட வனவாசி பகுதியில் முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ‘எடப்பாடி தொகுதி மக்கள் 2011 மற்றும் 2016-ல் வெற்றி பெற வைத்தீர்கள். உங்களை ஒவ்வொரு முறை சந்திக்கும்போது, எனக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. உங்கள் ராசியால்தான் நான் முதலமைச்சராக ஆகியுள்ளேன். பலமுறை வந்த போதும் வனவாசியில் மட்டும் பேசவில்லை என்பதால் தற்போது இங்கு வந்துள்ளேன்.
234 தொகுதியில் முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எடப்பாடிக்குத்தான் உள்ளது. எங்கு சென்று சொன்னாலும், முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை உங்களால்தான் கிடைத்தது. எத்தனை பிறவி எடுத்தாலும் எடப்பாடி தொகுதி மக்களை மறக்க மாட்டேன். ஒவ்வொரு முறையும் எனக்கு உயர்வைக் கொடுத்து வரும் வாக்காள பெருமக்கள், இந்த முறையும் எனக்கு வாக்களிக்க வேண்டும்’ என முதல்வர் பழனிசாமி கூறினார்.
A #Vijay fans association member from the crowd at #EdappadiPalaniswami expressed his support to CM #EPS and CM expressed his thanks in return. pic.twitter.com/CFWunN8MTr
— Tamilstar (@tamilstar) April 3, 2021
தொடர்ந்து முதல்வர் பழனிசாமி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென முதல்வரை அழைத்து ஏதோ சொன்னார். அதைக் கேட்ட முதல்வர் முகத்தில் புன்னைகையுடன், ‘விஜய் ரசிகர் மன்ற ரசிகர் நமக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அவருக்கு அணியினர் சார்பாக நன்றி’ என கூறினார். உடனே கூடியிருந்த மக்கள் கைத்தட்டியும், விசில் அடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
