‘அனல் பறக்கும் தேர்தல் களம்’!.. திடீரென முதல்வரை சந்தித்த தமிழக விவசாய கூட்டமைப்பினர்... அவர்கள் சொன்ன ‘அந்த’ வார்த்தையை கேட்டு சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போன முதலமைச்சர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் இன்று (04.04.2021), தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சினி ஏ.கே.இராமசாமி தலைமையில், தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.
அப்போது மேட்டூர் உபரி நீரை, நீரேற்ற முறையில் வசிஷ்ட நதியில் விட வேண்டும் என்றும், இந்த திட்டத்தின் மூலம் நான்கு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள் என்றும் முதல்வரிடம் விவசாயிகள் தெரிவித்தனர். தொடர்ந்து விவசாயிகள் வைத்த பல்வேறு கோரிக்கைகளை கவனத்துடன் கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இன்று தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சினி ஏ.கே.இராமசாமி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் என்னை சந்தித்து விவசாயிகளுக்கு அறிவித்த திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்கு நன்றி கூறினர்.
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். pic.twitter.com/D6001OusuE
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 4, 2021
இதன்பின்னர் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு, தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு ஆதரவு அளிப்பதாக அதன் நிர்வாகிகள் கூறினர். இதனைக் கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி அடைந்தார்.

மற்ற செய்திகள்
