VIDEO: ‘படத்துல வர மாதிரியே ஒரு மாஸ் என்ட்ரி’!.. கேட்டை திறந்ததும் சைக்கிளில் ‘சீறிப்பாய்ந்த’ தளபதி.. வைரலாகும் LATEST வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய் தனது வீட்டில் இருந்து வாக்கு செலுத்த சைக்கிளில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (06.04.2021) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு 7 மணிக்குத் தொடங்கினாலும் காலை 6 மணி முதலே பல வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது.
அதேபோல் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடிகர்கள் ரஜினி, அஜித்குமார், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினார். தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்திலுள்ள வாக்குச்சாவடிக்கு விஜய் சைக்கிளில் வந்தார். பொதுமக்கள் அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்கு செலுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் வந்ததாக கூறப்படுகிறது.
#ThalapathyVijay arrives in cycle to cast his vote in #TamilNaduElections 👍#Thalapathy #Vijay @actorvijay pic.twitter.com/Y0MfcbNUSn
— Suresh Kondi (@V6_Suresh) April 6, 2021
விஜய் சைக்கிளில் வருவதை அறிந்த ரசிகர்கள் அவரை இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்தனர். இதனை அடுத்து வாக்கு செலுத்திய பின் சைக்கிளில் வீடு திரும்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதிக அளவிலான ரசிகர்கள் குவிந்ததால், தனது கார் ஓட்டுநரின் இருசக்கர வாகனத்தில் நடிகர் விஜய் வீடு திரும்பினார். இந்த நிலையில் நீலாங்கரை வீட்டில் இருந்து சைக்கிளில் விஜய் வந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
