'ஓடியாங்க... ஓடியாங்க... இங்க வந்து பாருங்க'!.. ஓட்டு போட்ட பின்... வாக்குச்சாவடியில் அலறிய வாக்காளர்கள்... வாக்குப்பதிவை நிறுத்திய அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று (6.4.2021) காலை 7 மணி முதல் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

முதல் முறை வாக்காளர்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களது ஜனநாயக கடமையை செய்துவருகின்றனர். இதற்கிடையே, சில வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்கு இயந்திரத்தில் கோளாறுகள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவற்றை ஆங்காங்கே சரிசெய்து வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விருதுநகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் எழுந்த குற்றச்சாட்டு வாக்காளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எதற்கு வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக வாக்காளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் சத்ரியா பள்ளி வாக்குச்சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக வாக்காளர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வாக்கு இயந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், வாக்கு இயந்திரத்தில் குளறுபடி நடப்பதாக வாக்கு சாவடி அலுவலர்களிடம் வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மற்ற செய்திகள்
