'சிவப்பு பட்டையுடன் கூடிய கருப்பு மாஸ்க்'... 'நடிகர் அஜித் அணிந்துவந்த முகக்கவசம்'... ட்விட்டரில் நெட்டிசன்கள் நடத்திய விவாதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவப்பு பட்டையுடன் நடிகர் அஜித் அணிந்து வந்த மாஸ்க் ட்விட்டரில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

தமிழக தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாகக் காலை ஏழு மணிக்கு ஆரம்பித்து இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. காலையிலேயே அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், முக்கிய பிரபலங்கள் வந்து தங்களது வாக்குகளைச் செலுத்தி இருக்கின்றனர்.
நடிகர் அஜித் இன்று காலையிலேயே முதலாவதாக வந்து தமது வாக்கினைச் செலுத்தியிருந்தார். தமது மனைவி ஷாலினியுடன் வந்து அவர் தன் ஜனநாயக கடமையை ஆற்றினார். இந்நிலையில் நடிகர் அஜித் அணிந்து வந்த இரட்டை நிற முகக்கவசம் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியிருக்கிறது. நடிகர் அஜித் வாக்களிக்கும் போது சிவப்பு பட்டையுடன் கூடிய கருப்பு மாஸ்க் அணிந்து வந்தார்.
அஜித் அணிந்துவந்த முகக்கவசம் பற்றி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுடைய கருத்தினை பதிவு செய்து வருகின்றனர். அஜித் மறைமுகமாகத் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதேபோன்று நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தமது வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு வரும் போது சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கிறார்.
பெட்ரோல், டீசல் விலை பெரும் பிரச்சனையாக மாறியுள்ள நிலையில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ஒரு விவாத பொருளாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலை உயர்வுக்கு நூதனமாக எதிர்ப்பு தெரிவிக்கவே விஜய் சைக்கிளில் வந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

மற்ற செய்திகள்
