'அவர டீம்ல இருந்து தூக்குங்க'!.. ஜாம்பவானுக்கே செக் வைத்த சீனியர் வீரர்!.. 'இது' மட்டும் நடந்தா... கொல்கத்தா அணிக்கு தான் 'கப்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Apr 06, 2021 06:47 PM

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு, அந்த அணியின் ப்ளேயின் லெவன் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் குறிப்பிட்டுள்ளார்.

ipl kkr aakash chopra requests to drop this overseas player

14வது ஐபிஎல் லீக் தொடர் வருகிற ஏப்ரல் ஒன்பதாம் தேதி தொடங்கப்பட்டு மே 30ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. 2012ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டு என இரு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அதன் பின்னர் தற்போது வரை கோப்பையை கைப்பற்றவில்லை. இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இந்த 11 வீரர்கள் இருந்தால் போதும் நிச்சயம் நன்றாக விளையாடலாம் என்றும் இவர்கள் சரியாக விளையாடினால் கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு அதிக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா கூறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள்: ராகுல் திரிபாதி, சுப்மன் கில், நிதிஷ் ராணா, இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரியூ ரசல், பேட் கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி, பிரசீத் கிருஷ்ணா, லோகி பெர்குஷான்/ சுனில் நரைன்/ ஷாகிப் அல் ஹசன், குல்தீப் யாதவ்.

வீரர்களை பட்டியலிட்ட ஆகாஷ் சோப்ரா தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதி மற்றும் சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்துள்ளார். அதற்கடுத்தபடியாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக நித்திஷ் ஆனா தினேஷ் கார்த்திக் மற்றும் இயன் மோர்கனை தேர்ந்தெடுத்துள்ளார்.

ஆல்ரவுண்டர் வீரர்களாக பேட் கம்மின்ஸ் மற்றும் ஆண்டரூ ரசலை தேர்ந்தெடுத்துள்ள ஆகாஷ் சோப்ரா பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவை தேர்ந்தெடுத்துள்ளார்.

மேலும், இந்த ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் நன்றாக விளையாடவில்லை எனில், அவரை Playing 11-ல் எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேற்கு இந்திய தீவு வீரரான சுனில் நரைன் ஒரு மிகச்சிறந்த ஆல் ரவுண்டர் ஆவார்.

ஆனால், கடந்த ஐபிஎல் தொடரில் அவர் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். அவரது மோசமான ஆட்டம் குறித்து விமர்சனங்கள் எழுந்த போதிலும் அவர் தன்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ளவில்லை என்று ஆகாஷ் சோப்ரா காட்டமாக விமர்சித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ipl kkr aakash chopra requests to drop this overseas player | Sports News.