'இந்த தேர்தல் மட்டும் இல்ல'...'எனது நிலைப்பாடு என்ன'?... வாக்களித்த பின்பு நடிகர் விஜய் சேதுபதி அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனது ஜனநாயக கடமையை ஆற்றிய நடிகர் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடக்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அதிகாலையிலேயே வாக்குச் சாவடிக்கு வந்து வாக்குகளைச் செலுத்தினர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊரிலும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தன் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப் போட்டார்.
மேலும் நடிகர்கள் அஜித், விஜய், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன், சித்தார்த், யோகி பாபு, பிரபு, விக்ரம் பிரபு, நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் மக்களோடு மக்களாக வாக்குச்சாவடிகளில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கைச் செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் சேதுபதி தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் மக்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதோடு இந்த தேர்தல் மட்டுமல்லாது எல்லாம் தேர்தல்களிலும் சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
