'ஏற்காடு சுத்தி காட்டுற மாதிரி அழச்சுட்டு போயி'.. 'பள்ளிச் சிறுமிகளையும்'.. அதிரவைக்கும் ஆட்டோ டிரைவரின் இன்னொரு 'முகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Sep 28, 2019 10:25 PM
ஆட்டோவில் ஏறும் பெண்களை தனது நண்பனின் உதவியுடன் பேசி மயக்கி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களின் கஷ்டத்துக்கு உதவி செய்யுமாறு செய்து அவர்களை தனது பாலியல் இச்சைக்கு இரையாக்கிய சேலம் சீரியல் ரேப்பிஸ்ட் மோகன்ராஜின் கைது பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

மனைவி விட்டுச்சென்ற நிலையில், நண்பனின் மனைவியை மயக்கி திருமணம் செய்துகொண்ட மோகன் ராஜ் அந்த மனைவியும் தன்னுடைய கேரக்டர் சரியில்லை என்று விட்டுச் சென்றதையடுத்து, தனது ஆட்டோவில் ஏறும் பெண்களில் குடும்பப் பெண்கள், கல்லூரி மாணவிகள் உட்பட பலரது வாழ்க்கையும் நடித்து நாசமாக்கியுள்ளார்.
அதுமட்டுமன்றி அவர்களுடன் உறவு வைத்துக்கொண்டு, அவற்றை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தும் வந்த மோகன்ராஜ், மீது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட மோகன் ராஜிடம் போலீஸார் விசாரித்த பின்னர், அவர் சேலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் சிலரையும் ஆட்டோவில் ஏற்றி ஏற்காடு அழைத்துச் சென்று சுற்றியுள்ளதாக அடுத்தடுத்து அதிர்ச்சி வாக்குமூலங்கள் கிடைத்துள்ளன.
மோகன்ராஜ் தனது நண்பனுடன் சேர்ந்து ஆட்டோவில் ஏறும் பள்ளிச்சிறுமிகளிடம் அதை இதை வாங்கித் தருவதாகச் சொல்லியும், அவர்களுக்கு ஏற்காட்டை சுற்றிக்காட்டுவதாக சொல்லியும் பேசி, காலையில் அழைத்துச் சென்று ஏதுமறியா அந்த குழந்தைகளுடன் நாள் முழுவதும் நெருக்கமாக இருந்துவிட்டு மீண்டும் சாயுங்காலம் வீட்டுக்கு வந்து விட்டுள்ளதாக மோகன் ராஜ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பு: மாணவிகளின் உருவழிப்பு செய்யப்பட்ட படம் சித்தரிப்புக்காக இணைக்கப்பட்டுள்ளது.
