'7 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய'..'ஆட்டோ ஓட்டுனர்'.. நடுங்க வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 26, 2019 11:43 AM

சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களைக் கடத்தி, ஆட்டோ ஷங்கர் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக அடையாளம் காணப்பட்டார். அதே பாணியில் சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான ஆட்டோ மோகன்ராஜ். பெண்களைக் கடத்தி பலாத்காரம் செய்ததோடு, அதற்கு சாட்சியாக வீடியோவும் எடுத்துள்ளார்.

TN auto driver abuses 7 women passenger and takes video

ஆட்டோ தொழிற்சங்க தலைவராக உள்ள சேலம் மகுடஞ்சாவடியை சேர்ந்த மோகன்ராஜ், தனக்கு சொந்தமான இரண்டு ஆட்டோக்களில், ஒரு ஆட்டோவை தனது நண்பருக்கு வாடகைக்கு கொடுத்துவிட்டு, ஒரு ஆட்டோவை , தான் ஓட்டிவந்ததாகக் கூறப்படுகிறது. மோகன்ராஜை முதலில் திருமணம் செய்த பெண், அவரின் நடத்தை பிடிக்காமல் அவரை விட்டுசென்றுவிட்டார். இதனையடுத்து தனது நண்பனின் வீட்டுக்கு சென்றபோது அவரது மனைவியை மயக்கி, தன்னுடன் அழைத்துவந்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் 2வது மனைவியும் சில நாட்களில் சென்றுவிட்டார்.

இந்நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், மோகன் ராஜின் ஆட்டோவில் பயணித்ததாகவும் ஆனால் அவரை பாலியல் பலாத்காரம் செய்து,  வீடியோ எடுத்து, அதை வைத்து, தன்னை மிரட்டி படுக்கைக்கு அழைப்பதாகவும், 30 ஆயிரம் ரூபாய் பணம் கேட்பதாகவும், தவிர தன்னுடைய கணவரையும் தன்பாலின உறவுக்கு அழைப்பதாகவும் பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில், மோகன்ராஜ் கைதானதாக போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் மோகன்ராஜின் செல்போனை பறிமுதல் செய்தபோதுதான் அவர் இதேபோல் 6 குடும்பப் பெண்கள், ஒரு கல்லூரி பெண் உட்பட மொத்தம் 7 பெண்களை பலவந்தம் செய்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறார் என்றும் அவர் ஒரு சீரியல் பலாத்கார குற்றவாளி என்றும் தெரியவந்துள்ளது.

தனது ஆட்டோவில் வரும் பெண்களிடம் நல்லவர் போல் நடித்து, பணக் கஷ்டத்தில் இருக்கும் பெண்கள் என தெரிந்தால் அவர்களுக்கு உதவும் சாக்கில் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வது, அதன் பின்னர் அவர்களை பாலியல் இச்சைக்கு இரையாக்குவது, கடுமையாக தாக்குவது உள்ளிட்ட கொடுமைகளுக்கும் ஆளாக்கியுள்ளார் என பெண் ஒருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

Tags : #SEXUALABUSE #AUTO #DRIVER #MOHANRAJ #SELAM