'அடிச்ச அடில.. மிஞ்சுனது உயிர் மட்டும்தான்’.. 'போனில் வீடியோ'.. '16 வயது பெண்ணை'.. 'கூட்டு பலாத்காரம்'.. ஊரே கூடி கொடுத்த தண்டனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 25, 2019 01:34 PM

உத்தரப் பிரதேசத்தில் 16 வயது வளரிளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியதற்காக இளைஞர் ஒருவரை ஊர் மக்கள் உயிர் போகும் அளவுக்கு, பிரம்புகளால் அடித்து வெளுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youth beaten nearly to death after girl 16 gang raped

உத்தரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கிராமப் புறம் ஒன்றில், தீவனம் வாங்குவதற்காகச் சென்ற 16 வயது பெண்ணை முகமது நஸீம் என்கிற 20 வயது இளைஞர், அந்த பெண்ணிடம் ஏதேதோ சொல்லி, வயல்வெளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். என்னவென்று புரியாமல் அந்த பெண்ணும் அவருடன் சென்றிருக்கிறார்.

அங்கு தனது இரு நண்பர்களான முகமது சோட்கா மற்றும் முகமது பத்கா ஆகிய இருவரையும் வரச் சொல்லியிருக்கிறார். அங்கு மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்தும், செல்போனில் வீடியோ எடுத்தும் அதனை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இது பற்றி அப்பகுதி காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரை காவலர்கள் நிராகரித்ததால், ஊர் மக்களே கூடி, முகமது நஸீமை பிரம்பால் அடித்துள்ளனர். இதன் காரணமாக முகமது நஸீம் உயிர் போகும் அளவுக்கு பாதிக்கப்பட்டார். இதனை அறிந்த காவல்துறை மேலதிகாரிகள், முகமது நஸீமை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை ஏற்காத காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Tags : #SEXUALABUSE #UTTERPRADESH