'என்ன? 2 ஆயிரம் ரூபாய் கூட இல்லயா? 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு நண்பனிடம் அனுப்பிவைத்த பள்ளிச் சிறுவர்கள்!'
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Sep 27, 2019 12:08 PM
மத்திய பிரதேசத்தில் தங்களுடன் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமியை, சக நண்பர்களான சிறுவர்கள் இரண்டு பேர் சேர்ந்து தகாத முறையில் புகைப்படங்களை எடுத்து 2 ஆயிரம் ரூபாய் பணம் தரவில்லை என்றால், அந்த புகைப்படங்களை இணையத்தில் விட்டுவிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளனர்.

ஆனால், அந்த சிறுமி இதற்கு உடன்படாததால், சிறுமியை தங்களது இன்னொரு நண்பன் இருக்கும் ஹோட்டல் ஒன்றிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மேனேஜரின் உதவியோடு செல்வாக்கு மிகுந்த அந்த விடலை இளைஞன் சிறுமியை தனி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால் அந்த விடலை இளைஞனிடமும் பணம் கேட்டு இந்த இரண்டு சிறுவர்களும் மிரட்டியுள்ளனர். அதே சமயம் சிறுமியை தொடர்ந்து தொந்தரவு தர, சிறுமி 2,500 ரூபாய் பணம் தர ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. அதனைப் பெற்றுக்கொள்ள சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமியின் வீட்டுக்குச் சென்று, சிறுமியை பலாத்காரம் செய்ததோடு, அங்கிருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம், நகைகள் உள்ளிட்டவற்றை திருடிவந்துள்ளனர்.
இதை அறிந்த சிறுமியின் அம்மா, அதிர்ந்துபோய் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறுவர்கள் 2 பேர் , அவரது 3வது நண்பன், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட ஹோட்டலின் மேனேஜர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
