‘ஓடும் ஆட்டோவில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை’.. நடுரோட்டில் வீசிச் சென்ற கொடுமை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 27, 2019 12:42 PM

ஓடும் ஆட்டோவில் 6 -க்கும் மேற்பட்டோர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் தூக்கி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A woman was gangraped in a moving vehicle in Tripura

திரிபுரா மாநிலம் அகர்தலா என்னும் நகரில் உள்ள படர்காட் பகுதியைச் சேர்ந்த 32 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தனது உடல்நலம் சரியில்லாத மகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை மருத்துவமனையில் உள்ள மகளை பார்த்துவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது தனக்கு தெரிந்த ஆட்டோ ஓட்டுநருடன் ஆட்டோவில் சென்றுள்ளார்.

அப்போது ஆட்டோ ஓட்டுநர் திடீரென வழக்கமான பாதையைவிடுத்து மாற்று பாதையில் சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெண் இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். அதற்கு வழக்கமாக செல்லும் பாதையில் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார். ஆட்டோ சிறிது தூரம் சென்றதும் திடீரென நான்கைந்து பேர் ஆட்டோவில் ஏறியுள்ளனர். இதனை அடுத்து அப்பெண்ணின் வாயைப் பொத்தி ஓடும் ஆட்டோவிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

இதனை அடுத்து அந்த கும்பல் அப்பெண்ணை நடுரோட்டில் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. மயங்கிய நிலையில் கிடந்த அப்பெண்ணை பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே விரைந்து வந்த காவல் துறையினர் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த பாலியல் சம்பவத்தில் 9 பேர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுநர் பிரதீப் தாஸ், ராதாப் தாஸ், அஜோய் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : #SEXUALABUSE #WOMAN #GANGRAPED #TRIPURA #AUTORICKSHAW