அதிகாரிகள்,அரசியல்வாதிகள்... மொத்தம் 40 பெண்கள்...4000 செக்ஸ் வீடியோக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 27, 2019 11:17 PM

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த கார்ப்பரேஷன் அதிகாரி ஹர்பஜன் சிங் என்பவர் கடந்த வாரம் புகார் ஒன்றை பலசியா காவல் நிலையத்தில் அளித்தார்.அதில் தன்னுடன் இரண்டு பெண்கள் உறவு வைத்துக்கொண்டனர்.தற்போது வீடியோவை வைத்து தன்னை பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் என தெரிவித்து இருந்தார்.பலமுறை அவர்களுக்கு பணம் கொடுத்து விட்டேன் எனவும் கூறியிருந்தார்.

4,000 smut files of VIPs tumble out in MP honeytrap probe

இதனையடுத்து போலீசார் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அந்த பெண்களை வரவைக்குமாறு அவரிடம் சொல்லி பொறிவைத்து அந்த பெண்களை பிடித்தனர். விசாரணையில் மேலும் மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் இந்த வழக்கு மிகப்பெரிய பூதாகரமாக தற்போது உருவெடுத்துள்ளது.

தற்போது இந்த வழக்கில் சுமார் 40 பெண்கள் வரை சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.பல்வேறு அரசியல்வாதிகள், அதிகாரிகள்,முன்னாள் அமைச்சர்கள் என பலரும் இதில் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்காக தனிப்படை ஒன்றையும் போலீசார் அமைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுவரை சுமார் 4000 செக்ஸ் வீடியோக்களை போலீசார் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகள்,முன்னாள் அமைச்சர்கள் என பலருக்கும் பெண்களை அனுப்பி வைத்து,அதனை வீடியோவாக மொபைலில் பதிவு செய்து  வைத்துக்கொண்டு  அவர்களை இந்த பெண்கள் மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

இந்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கையையும் இவர்கள் வாழ்ந்துள்ளனர்.யாரும் துணிச்சலாக புகார் கொடுக்க வராதது இவர்களுக்கு வசதியாக போய்விட்டது. இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில்,''அரசு அதிகாரிகள் பலருக்கும் பெண்களை அனுப்பி அதன்மூலம் கோடிகளில் புழங்கும் காண்ட்ராக்ட்கள் குறித்த தகவல்களை  கமிஷன் பெற்றுக்கொண்டு தெரிவித்துள்ளனர்.மேலும் ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகளின் போஸ்ட்டுகளிலும் இவர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

கல்லூரி பெண்கள் சுமார் 24 பேர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. என்ஜிஓ பெயரில் பிரெயின்வாஷ் செய்து இந்த விஷயத்துக்கு கல்லூரி பெண்களை அந்த 5 பெண்களும் சம்மதிக்க வைத்துள்ளதாக தனிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விரைவில் இந்த வழக்கு மேலும் பூதாகரமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.