'லவ் பண்றப்போ என் கேரக்டர் தெரியலையா ...?!' 'இப்படி என்ன ஏமாத்திட்டியே ...' காதல் சண்டை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 30, 2020 06:27 PM

காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த பெண் போலீஸிடம் போலீஸ்காரர் ஒருவர் சண்டையிட்ட சம்பவம், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

woman who refused to marry after falling in love.

ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்குப் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. சென்னை ஆயுதப்படையில் போலீஸாக பணிபுரிந்துவரும் இவருக்கும் வேலூர் ஆயுதப் படையில் உள்ள பெண் போலீஸ் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது, நாளடைவில் காதலாக மாறியதால் திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவுசெய்தனர். இரு வீட்டாரும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், காதலன் பிரபுவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதாகக்கூறி பெண் போலீஸ் திருமணத்தை நிறுத்தியுள்ளார். காதலையும் அவர் முறித்துக்கொண்டதால் பிரபு கோபமடைந்தார்.

`என்னைத் திருமணம் செய்துகொள்’ என்று போனில் தொந்தரவு செய்துள்ளார். அதையடுத்து, பிரபுவிடம் பேசுவதை பெண் போலீஸ் முற்றிலுமாக தவிர்க்கத் தொடங்கினார். இதனால், ஆத்திரமடைந்த பிரபு காதலியைச் சந்திப்பதற்காக வேலூர் வந்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் சக பெண் போலீஸாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காதலியை சந்தித்து திருமணத்துக்கு வற்புறுத்தினார். அப்போது, இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பெண் போலீஸ் கையில் இருந்த `பாரா’ மாற்று புத்தகத்தைப் பிடுங்கினார் பிரபு.

கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்த பொதுமக்கள், அலுவலர்கள் பலர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததால் பதறிப் போன பெண் போலீஸ், காதலன் பிரபுவை அங்கிருந்து செல்லும்படி கெஞ்சினார். `காதலிக்கும்போது தெரியலையா என்னுடைய கேரக்டர், இப்படி ஏமாத்திட்டியே’ என்று புலம்பினார் பிரபு. பின்னர், சக போலீஸார் பிரபுவிடம் இருந்த `பாரா’ புத்தகத்தைப் போராடி வாங்கிய பிறகு அவரைப் பிடிக்க முயன்றனர். தன் மீது நடவடிக்கை பாயப்போகிறது என்று உணர்ந்த பிரபு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுதொடர்பாக பெண் போலீஸும் புகார் தர முன்வரவில்லை. ஆனாலும், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற  இந்தச் சண்டைதான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

Tags : #LOVE