ஏன்பா...! இவ்ளோ ஸ்பீடா போற...? 'ஆசையா மீன்குழம்பும், சிக்கன் 65 வாங்கினார்...' மது போதையினால்...' மகன் கண் எதிரே அப்பாவிற்கு ஏற்பட்ட கதி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூர் அருகே மதுபோதையில் இருந்த தந்தை இரு சக்கர வாகனத்தில் தன் மகனை அழைத்துக்கொண்டு சென்ற போது ஏற்பட்ட விபத்தில் மகன் கண் எதிரே இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்மன்பேட்டை கிராமம் வாணியர் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவர் தஞ்சாவூர் பொம்மை மற்றும் மண்பாண்டம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.இவரது மகன் சந்தோஷ் (19). பைக் மெக்கானிக்காக வேலை பார்க்கிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் தனது இரண்டு சக்கர வாகனத்தில் டாஸ்மாக் கடைக்குச் சென்று சரக்கடித்துள்ளார். அடித்துவிட்டு போதையிலேயே ஹோட்டலுக்குச் சென்று மீன் குழம்பு, சிக்கன் 65 போன்றவற்றை வாங்கிக்கொண்டு வேலைக்குச் சென்றிருந்த தனது மகனை பைக்கில் அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்.
ரவிச்சந்திரன் போதையில் இருந்ததால் வண்டியை வேகமாக ஓட்டியுள்ளார். `ஏன்பா இவ்ளோ ஸ்பீடா போற...? கொஞ்சம் மெதுவாகவே போ' என சந்தோஷ் கூறியிருக்கிறார். இந்நிலையில் மனக்கரம்பை என்ற இடத்தில் நிலைதடுமாறிய ரவிச்சந்திரன் எதிரே வந்த கார் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர. இதில் ரவிச்சந்திரன் இறந்துவிட அவரது மகன் சந்தோஷ் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தை பார்த்தவர்கள் சினிமா காட்சிகளில் வருவது போல் நடந்ததாக தெரிவித்துள்ளனர். ரவிச்சந்திரன் வாங்கி வந்த மீன் குழம்பு, சிக்கன் 65 சாலையில் சிதறிக் கிடந்தது. இதில் இரண்டு பேருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் ரவிச்சந்திரன் உயிரிழந்தார். காரின் மேல் பகுதியில் கிடந்த சந்தோஷ், `மெதுவாக போ' எனச் சொன்னதைக் கேட்காமல் போனீயே. ஆசையா வாங்கின சாப்பாட்டைக்கூட சாப்பிடாம போயிட்டீயே' எனக் கதறியது அருகில் இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மற்ற செய்திகள்
