'லாரிகள்' நேருக்கு நேர் மோதி 'கோர விபத்து...' 'அலறிய தொழிலாளர்கள்...' 'சம்பவ' இடத்திலேயே '24 பேர் பலி...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | May 16, 2020 10:11 AM

ராஜஸ்தானில் இருந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு, உத்தரப்பிரதேசம் சென்ற லாரி, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Accident kills 24 migrant workers in Uttar Pradesh

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்க அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்தஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை தங்கள் மாநிலத்திற்கு அழைத்து செல்ல மத்திய அரசு சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஆனாலும், தனிமைப்படுத்தலுக்கு பயந்து சில தொழிலாளர்கள் நடந்தோ, லாரியில் ஏறியோ பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, லாரியில் மொத்தமாக பயணித்தனர். அவர்களை ஏற்றி வந்த லாரி, உத்தரபிரதேச மாநிலம் ஆரையா பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.