செல்போன்ல ‘இன்டர்நெட்’ தீர்ந்து போச்சு.. ‘ரீசார்ஜ்’ பண்ண மறுத்த பெற்றோர்.. இளைஞர் செய்த விபரீதம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசெல்போனுக்கு ரீசார்ஜ் பண்ண பெற்றோர் மறுத்ததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் தனது செல்போனுக்கு இன்டர்நெட் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அவரது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போபால் காவல்நிலைய போலீஸ் அதிகாரி எஸ்.ஷர்மா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, ‘தனது பெற்றோரிடம் ரீசார்ஜ் செய்து தரக்கோரி அந்த இளைஞர் அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவர்கள் ரீசார்ஜ் செய்ய மறுத்துள்ளனர். ஏன் மறுத்தனர் என தெரியவில்லை. இதனால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்துள்ளார்’ என அவர் கூறியுள்ளார். மேலும் முழுமையான விசாரணைக்கு பிறகே தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவரும் என போலீஸ் அதிகாரி எஸ்.ஷர்மா தெரிவித்துள்ளார்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.