கழுத்தில் விழுந்த 'பலாப்பழம்'... சிகிச்சைக்காக 'மருத்துவமனை' சென்றவருக்கு... பரிசோதனையில் உறுதியான 'கொரோனா' !
முகப்பு > செய்திகள் > இந்தியாகழுத்தில் பலாப்பழம் விழுந்ததாக சிகிச்சைக்கு சென்றவருக்கு கொரோனா உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
![Jackfruit falls on Man in Kerala; he tests Positive for COVID--19 Jackfruit falls on Man in Kerala; he tests Positive for COVID--19](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/jackfruit-falls-on-man-in-kerala-he-tests-positive-for-covid-19.jpg)
கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. வெளிமாநிலம், வெளிநாடு எதுவும் செல்லவில்லை என்பதால் அவருக்கு எங்கிருந்து கொரோனா பரவியது? என்று தெரியாமல் மருத்துவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ''பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறியபோது தவறி விழுந்ததாக இரண்டு நாட்களுக்கு முன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பழம் அவரது தலையில் விழுந்ததால் கழுத்து முறிவு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டியது இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்தோம். சோதனையில் அவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துவிட்டது,'' என தெரிவித்து இருக்கின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)