“திரும்பி வந்துட்டோம்னு சொல்லு!”.. ஊரடங்குக்கு பின் ‘இந்த பகுதிகளில்’ மீண்டும் ஃபார்முக்கு வந்த ‘டிவின் பேர்ட்ஸ்’ ஆடையகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் பிரபலமாக விற்பனையாகி வரும் ஜவுளி நிறுவனமான டிவின் பேர்ட்ஸ், தனது கிளைகளை கொரோனா லாக்டவுனுக்கு பிறகு வெகுவாக இயக்கத் தொடங்கியுள்ளது.

பெண்கள், இளம் பெண்கள், வளரிளம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் விரும்பும் வைட் லெக் பலாஸோ, ஸ்லிம் ஃபிட் சிக்னேச்சர் டிஷர்ட்ஸ், ஆங்கிள் லெகிங், கேப்ரி லெகிங், டெனிம் லெகிங், ஜீன்ஸ் உள்ளிட்ட விதவிதமான கலெக்ஷன்கள், விதவிதமான ரக ஆடைகள், வெரைட்டியான வண்ணங்களுடன் கூடிய டிவின் பேர்ட்ஸ் ஷோ ரூம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே கொரோனா எனும் கொடுநோயின் தாக்கத்தால், உலகநாடுகள் அதைத் தடுக்கும் பணிகளில் தீவிரமாக இருந்துவந்தன. பின்னர் இந்தியாவிலும் இதனைத் தொடர்ந்து ஊரடங்கு 4 கட்டங்களாக அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போதும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை என்பதால், கொரோனாவை எதிர்கொள்வதற்கான தடுப்புமுறைகளைக் கையாண்டு விழிப்புடன் நாம் இருப்பதை அறிவுறுத்தி, ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
இதனை அடுத்து மக்களின் தேவைகளுக்காக இயங்கும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் திறக்கப்பட்டன. இவ்வரிசையில் இளம் பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களின் ஃபேவரைட் ஆடையகமான டிவின் பேர்ட்ஸ் லெகிங் கலெக்ஷன்களுக்கான ஜவுளி நிறுவனமும், ஊரடங்கால் மூடப்பட்டிருந்த தமது கிளைகளை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், அரசின் கொரோனா விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை பின்பற்றும் வகையிலும் மாஸ்க் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், தனிமனித இடைவெளி, சமூக விலகல், சானிட்டைஸர் பயன்படுத்தி கிருமிகளை அழித்தல், நம்மை நாமே விழிப்புடன் இருக்கச் செய்தல் உள்ளிட்ட கொரோனாவுக்கு எதிரான தடுப்பு முறைகளுடன் இயங்கத் தொடங்கியுள்ளது டிவின் பேர்ட்ஸ்.

மற்ற செய்திகள்
