‘போதையில் இருந்த இளைஞரால்’... ‘6 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’... ‘சென்னையில் நடந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 10, 2019 12:58 PM

சென்னையில் 6 மாத குழந்தையின் கழுத்தை, இளைஞர் ஒருவர் கத்தியால் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A teenager chopping off a neighbor\'s child neck in chennai

சென்னை புழல் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் குமார் - பிரியா தம்பதியினர். இவர்களுக்கு 6 மாதத்தில் சாய் சரண் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர்கள் வசிக்கும், அதேப் பகுதியில் வசித்து வருபவர் ஆகாஷ் என்ற இளைஞர். இவரின் பெற்றோர் தங்கள் வீட்டு சாவியை பிரியாவிடம் கொடுத்துவிட்டு வெளியே சென்றனர். இதற்கிடையில், பிரியாவின் வீட்டுக்கு சென்ற ஆகாஷ், தனது வீட்டுச் சாவியை கேட்டுள்ளார். அப்போது கஞ்சா போதையில் ஆகாஷ் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பிரியா சாவி தர மறுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, ஆத்திரம் அடைந்த ஆகாஷ், பிரியாவின் 6 மாத குழந்தை சாய் சரணின் கழுத்தை கத்தியால் அறுத்தார். அதை தடுக்கச் சென்ற பிரியாவின் தாய் சாரதாவையும் தாக்கி விட்டு தப்பினார். இதில் படுகாயம் அடைந்த குழந்தையை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ஆகாஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAI #CHILD