‘உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் வாட்ஸ்அப் பயன்பாடு’.. ‘விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Nov 01, 2019 10:47 AM
இந்தியர்களின் வாட்ஸ்அப் பயன்பாடு உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. என்ற நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், நாடுகளுக்கு இடையேயான தூதர்கள், சமூக ஆர்வலர்கள் என 1400 பேரின் செல்ஃபோன்களுக்கு மால்வேரை அனுப்பி பெகாசுஸ் என்ற மென்பொருள் மூலம் அவர்களுடைய வாட்ஸ்அப் செயல்பாடுகளை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் பஹ்ரைன், மெக்சிகோ, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் வாட்ஸ்அப் பயன்பாடும் உளவு பார்க்கப்பட்டதாக ஃபேஸ்புக் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மத்திய அரசு நவம்பர் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள உள்துறை அமைச்சக அதிகாரிகள், “நாடு முழுவதும் முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற சிலரின் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் பற்றி மக்கள் கவலைப்படத் தேவையில்லை. அதற்கு தேவையான நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்படும். குடிமக்களின் உரிமைகள் சட்டப்படி பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்” எனத் தெரிவித்துள்ளனர்.