‘மயக்க மருந்து கொடுத்து மாணவிக்கு நடந்த பயங்கரம்..’ வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 25, 2019 03:54 PM

தேனியில் பள்ளி மாணவிக்கு பிரியாணியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Man rapes school student after spiking her food in Theni

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த சக்திநாகராஜ் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். பள்ளி செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் வழியில் தன்னை காதலிக்கும்படி மாணவியை அவர் வற்புறுத்தியுள்ளார். சக்திநாகராஜின் பெற்றோரும் இதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி மாணவியை மிரட்டி தனது வீட்டிற்கு அழைத்துச்சென்ற சக்திநாகராஜ் பிரியாணியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை வற்புறுத்தி சாப்பிட வைத்துள்ளார். சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்த மாணவியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தனது செல்ஃபோனிலும் படம் பிடித்த சக்திநாகராஜ் நடந்ததை வெளியில் சொன்னால் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதைப் பற்றி மாணவி தன் பெற்றோரிடம் கூற அவர்கள் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சக்திநாகராஜ் மற்றும் அவரது பெற்றோரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Tags : #THENI #SCHOOL #STUDENT #SPIKED #BIRIYANI #RAPE #VIDEO