‘போலீஸ்’ எனக் கூறி இளைஞரைத் தாக்கிவிட்டு.. ‘காதலியைக் கடத்திச் சென்று செய்த கொடூரம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 05, 2019 06:37 PM

திருச்சியில் போலீஸ் எனக் கூறி ஒருவர் இளைஞரைத் தாக்கிவிட்டு அவருடைய காதலியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Fake police arrested for molesting college student in Trichy

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்றுள்ளார்.  பின்னர் இரவு இருவரும் கல்லூரிக்கு வெளியில் உள்ள பேருந்து நிலையத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த மணிகண்டன் என்பவர் தான் ஒரு போலீஸ் எனக் கூறி அந்தப் பெண்ணின் காதலரைத் தாக்கியுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை கல்லூரியில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றவர், அங்கிருந்து ஒரு காட்டுப்பகுதிக்கு அவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றி பாதிக்கப்பட்ட இருவரும் அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டனை கைதுள்ள போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #FAKE #POLICE #COLLEGE #STUDENT #RAPE #ATTACK #TRICHY