'ஸ்கூல் பையன்'.. 'அதுவும் வேற ஜாதி'.. அவனோட கள்ள உறவா?'.. 'செருப்பு மாலை' அணிவித்த 'பஞ்சாயத்து'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 22, 2019 06:58 PM

ஹரியானாவில் கர்னல் மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவர், 16 வயது சிறுவனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால், ஊர் பஞ்சாயத்தில் மக்கள் கூடி, அவர்கள் இருவருக்கும் தண்டனை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

minor boy and married woman garlanded with shoes paraded

பீகாரில் பிறந்து ஹரியானாவில் ஒருவரை மணந்த பெண் ஒருவர், அதன் பின் தன் கணவர் திருநங்கையாக மாறியதைக் கண்டுள்ளார். திருவிழா மற்றும் ராம லீலை உள்ளிட்ட கூத்துக்களில் நடனமாடி வருகிறார் அவர். இதனிடையே தன் கணவர் திருநங்கையாக மாறியதை அடுத்து, 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர் ஒருவருடன் நட்பாக பழகியுள்ளார்.

இந்த நட்பு, கள்ளக்காதல் என ஊராரால் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பஞ்சாயத்தில் பேசி, அந்த பள்ளிச்சிறுவனை அந்த ஊரார் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும் கொலை செய்யவும் துணிந்தனர். ஆனால், அதன் பின், இந்த பெண்ணுக்கும், அந்த மாணவருக்கும் செருப்பால் மாலை அணிவித்து ஊரார் பார்க்கும்படி ஊர்வலம் செல்லவைத்துள்ளனர். ஊரை விட்டும் தள்ளிவைத்துள்ளனர்.

இந்த சம்பவம் வீடியோவாக பரவியதைப் பார்த்த போலீஸார், அந்த மாணவரை மருத்துவமனையில் அனுமதித்தோடு, இந்த முடிவினை எடுத்த பஞ்சாயத்து பிரதிநிதிகளைத் தேடிவருகின்றனர். ஆனால் அவர்கள் முன் ஜாமீன் வாங்குவதற்காக, தற்காலிமாக தலைமறைவாகியதாகவும், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, இந்தக் கள்ளக்காதல் உறவில் அந்த பள்ளி மாணவரும், இந்த மணமான பெண்ணும் வேறு வேறு ஜாதியினர் என்பதாலேயே இருவரும் இப்படி நடத்தப்பட்டார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

Tags : #HARYANA #BIZARRE #WOMAN #STUDENT #AFFAIR #VILLAGE #PEOPLE