‘புத்தகம் வாங்க சைக்கிளில் சென்ற மாணவன்’.. வேகமாக வந்த பஸ் மோதி சக்கரத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jul 29, 2019 05:39 PM

புத்தகம் வாங்குவதற்காக சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் மீது பேருந்து மோதி பலியனா சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bus collides school student in Kanchipuram

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற மாணவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7 வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை புத்தகம் வாங்குவதற்காக சைக்கிளில் புத்தகக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது காமராஜர் சாலையைக் கடந்து செல்வதற்காக சாலையின் ஓரமாக நின்றுள்ளார்.

அப்போது அந்த வழியே வந்த தனியார் பேருந்து ஒன்று மாணவர் மீது மோதியுள்ளது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவன் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதனால் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற பேருந்து ஓட்டுநரை அங்கிருந்த மக்கள் பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். புத்தகம் வாங்க சென்ற மாணவன் மீது பேருந்து மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BUS #STUDENT #KANCHIPURAM #ACCIDENT