‘அமெரிக்காவில் விடுமுறை நாளில் வெளியே சென்ற’.. ‘இந்திய மாணவருக்கு நடந்த பரிதாபம்..’

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Aug 21, 2019 07:56 PM

அமெரிக்காவில் ஏரியில் மூழ்கி 27 வயது  இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

27 Year Old Indian Student Drowns In US Lake

இந்தியாவைச் சேர்ந்த சுமேத் மன்னார்  (27) அமெரிக்காவின் ஓரிகன் பகுதியிலுள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியிலுள்ள கிரேடர் ஏரிக்குச் சென்ற சுமேத் அங்குள்ள ஜம்பிங் ராக் என்ற பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்து ஏரிக்குள் குதித்த அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மீட்புக் குழுவினருடன் வந்த போலீஸார் சுமேத்தை தீவிரமாகத் தேடியுள்ளனர்.

இதையடுத்து திங்கட்கிழமை 90 அடி ஆழத்தில் பாறைகளுக்கு இடையில் இருந்து சுமேத்தின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஏரிக்குள் குதித்தபோது பாறை தாக்கி அவர் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் அவர் உயிரிழந்தாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #US #AMERICA #INDIAN #STUDENT #LAKE