‘குறுக்கே பேசிய மாணவர்’... 'ஆத்திரத்தில் போராசிரியரின் பகீர் காரியம்'... அதிர்ச்சி வீடியோ!...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Aug 12, 2019 01:07 PM

தெலுங்கானாவில் கல்லூரி மாணவர் ஒருவரை, பேராசிரியர் கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Teacher booked for thrashing Inter first year student

தெலுங்கானாவின் ஜெக்டியல் பகுதியில் சாந்தி ஜூனியர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதாரம் மற்றும் குடிமையியல் பிரிவில் மனோஜ் குமார் என்ற மாணவர் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை, புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கான பார்ட்டி குறித்த அறிவிப்பு ஒன்றை, வேதியியல் பேராசிரியரான சித்திராஜூ என்பவர், மனோஜ்குமார் படித்துவரும் வகுப்பிற்கு சென்று வாசித்தார். அந்தப் பேராசிரியர் அந்த வகுப்பின் பேராசிரியர் இல்லை.

எனினும் பேராசிரியர் அறிவிப்பை வாசித்துக்கொண்டிருந்தபோது, இடையில் குறுக்கிட்ட மாணவர் மனோஜ்குமார், அறிவிப்பை விரைந்து பேசி முடிக்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பேராசிரியர், மாணவர் மனோஜ்குமாரை கடுமையாக தாக்கியுள்ளார். அவரது தலை முடியைப் பிடித்து தாக்கிய அவர், அவரின் தலையைப் பிடித்து பெஞ்ச் மீது கொடூரமாக தாக்கினார். பின்னர் மாணவர் மானோஜ்குமாரை கடுமையாக எச்சரித்த அவர், அங்கிருந்த மற்றொரு மாணவரையும் தாக்கினார். 

இதையடுத்து மனோஜ்குமாரின் சகோதரர், இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசாரை நாடினார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆதாரங்களாகக் கொண்டு பேராசிரியரை கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Tags : #TELANGANA #STUDENT #ATTACKED #LECTURER #COLLEGE