‘எனக்கு கிடைக்காதது யாருக்குமே கிடைக்கக்கூடாது..’ காதலிக்க மறுத்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 23, 2019 12:56 PM

திருச்சியில் இளைஞர் ஒருவர் காதலிக்க மறுத்த பெண் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man sets law college student on fire in Trichy over love issue

கும்பகோணம் பட்டீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவர் திருச்சியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஏற்கெனவே திருமணமான அவர் தற்போது விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ள நிலையில், தோழிகளுடன் வீடு எடுத்துத் தங்கிப் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் தவச்செல்வன் என்பவர் ரம்யாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அவரை அடிக்கடி சந்தித்து தன்னை காதலிக்கும்படி தவச்செல்வன் வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு ரம்யா தொடர்ந்து  மறுப்பு தெரிவித்துவந்ததால், நேற்று அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து தவச்செல்வன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரத்தில் தான் எடுத்துவந்த பெட்ரோலை ரம்யாவின் மீது ஊற்றி, ‘எனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது’ எனக் கூறிக்கொண்டே தீ வைத்துள்ளார்.  பின்னர் ரம்யாவின் செல்ஃபோனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். ரம்யாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீக்காய பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு 40 முதல் 45 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தப்பியோடியுள்ள தவச்செல்வனை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags : #TRICHY #LAWCOLLEGE #STUDENT #LOVE #PETROL #FIRE