'அண்டாவில்' ஊற்றப்பட்ட 'வெந்நீர்'... 'அலறல்' சத்தம் கேட்டு பதறி ஓடிய 'தாய்'... 'நொடியில்' நிகழ்ந்த 'விபரீத' சம்பவம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெரியபாளையம் அருகே வெந்நீர் அண்டாவில் தவறி விழுந்து 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் தலையாரி தெருவைச் சேர்ந்த கஜேந்திரன்- குப்பம்மாள் தம்பதியினரின் 4 வயது மகள் நித்தியஸ்ரீ.
குப்பம்மாள் தனது மகளை வெந்நீரில் குளிக்க செய்வது வழக்கம். வழக்கம்போல வெந்நீரை கொண்டு வந்து குளியல் அறையில் இருந்த பெரிய அண்டாவில் ஊற்றி விட்டு சமையலறைக்கு கேஸ் அடுப்பை ஆஃப் செய்ய சென்றார். அப்போது அண்டா அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நித்தியஸ்ரீ வெந்நீர் அண்டாவில் தவறி விழுந்தாள். இதில் அவள் அலறி துடித்தாள்.
சத்தம் கேட்டு பதறித் துடித்து வந்த குப்பம்மாள் குழந்தை நித்தியஸ்ரீயை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நித்தியஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
