darbar USA others

"தலைமுடியை விற்று"... "தாய் செய்த காரியம்!"... "சேலத்தில் ஒரு சிங்கப்பெண்!"... "என்ன செய்தார் தெரியுமா?"...

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Manishankar | Jan 12, 2020 06:13 PM

தலைமுடியை விற்று, தனது குழந்தைகளின் பசியைப் போக்கிய தாய்க்கு குவியும் பாராட்டுக்கள்.

A poor mother fed her children by selling her hair

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பாண்டியன் தெருவில் வசிக்கிறார், பிரேமா. ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவிக்கும் இவர், அருகில் இருக்கும் செங்கல் சூளையில் செங்கல் அறுக்கும் வேலைக்குச் செல்கிறார்.

மூன்று ஆண் குழந்தைகளுக்குத் தாயான இப்பெண், அவர் கணவரை சில மாதங்களுக்கு முன் இழந்துவிட்டார். இந்நிலையில், இவரும் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால், வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், குழந்தைகளின் பசியாற்றுவதற்குக் கூட பணம் இல்லாமல் தவித்துள்ளார்.

அவர் குடியிருப்புக்குப் பக்கத்தில் தலை முடியைக் காசுக்கு வாங்கும் கடை உள்ளது. தனது குழந்தைகளின் பசி அழுகையை தாங்கிக் கொள்ள முடியாது, சிறிதும் தயங்காமல், தனது தலைமுடியைக் கொடுத்துவிட்டார். முடி விற்ற பணத்தில், குழந்தைகளுக்கு உணவு சமைத்து ஊட்டியுள்ளார்.

இச்சம்பவத்தை அறிந்த பலரும், இந்த ஏழைத் தாய்க்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். மேலும், அவருக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்துள்ளார்.

Tags : #SALEM #MOTHER #CHILD #CARE #POVERTY